ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது கல் வீச்சு


ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது கல் வீச்சு
x
தினத்தந்தி 4 Jun 2021 2:55 PM IST (Updated: 4 Jun 2021 2:55 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் க்ரல் போரா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.  இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-  கொரோன தொடர்பான பணிகளுக்காக மத்திய ரிசர்வ் படை வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, க்ரல்போரா என்ற இடத்தில் மர்ம நபர்கள் சிலர் வாகனத்தை சூழ்ந்து கொண்டு கல் வீசி தாக்குதல் நடத்தினர்.  இதனால், அவர்களை விரட்டியடிக்க வானத்தை நோக்கி 2-3 முறை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை” என்றனர். 


Next Story