தேசிய செய்திகள்

மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்தது + "||" + Maharashtra adds 10,219 new Covid cases; 730 fresh infections in Mumbai

மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்தது

மராட்டியத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் குறைந்தது
மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,219- ஆக குறைந்துள்ளது. 

தொற்று பாதிப்பு காரணமாக 154- பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,00,470- ஆக அதிகரித்துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து இன்று 21 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். 

மராட்டியத்தில் நேற்றைவிட இன்றைய தொற்று பாதிப்பு 2,338- குறைந்துள்ளது. நேற்று 12,557- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநில தலைநகர் மும்பையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. 

மும்பையில் இன்று 730 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தொற்று பாதிப்பு, பரவல் வேகம் குறைந்துள்ளதால் மராட்டியத்தில் இன்று முதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,857 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. ஒலிம்பிக்கை மிரட்டும் கொரோனா ; டோக்கியோவில் ஒரே நாளில் 3,177 பேர் பாதிப்பு
ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவில் அதிகரித்து வரும் கொரோனா பதிப்பு ஒரே நாளில் 3,177 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 640-பேர் உயிரிழந்துள்ளனர்.
4. ஈரானில் கொரோனா பாதிப்பு: ஒரேநாளில் புதிதாக 34,951 பேருக்கு தொற்று
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,767 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.