தேசிய செய்திகள்

ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + Today's corona vulnerability situation in Andhra Pradesh and Delhi states

ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
ஆந்திரா, டெல்லி மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி, 

ஆந்திரா

ஆந்திரமாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 8,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,87,883 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,763 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 12,981 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,77,063 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் தற்போது 99,057 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி 

டெல்லி மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 305 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,30,433 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.41 சதவிகிதமாகப் பதிவாகி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,748 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 560 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,01,473 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 4,212 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 36,100 பேருக்கு தொற்று
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் மேலும் 20 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஒடிசாவில் மேலும் 510 பேருக்கு கொரோனா - 6 பேர் உயிரிழப்பு
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 510 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பிலிப்பைன்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,271 பேருக்கு தொற்று
பிலிப்பைன்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,271 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
5. பயிற்சி ஆட்டத்தில் சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய டோனி..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.