தேசிய செய்திகள்

பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவருடன் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு + "||" + Yogi Adityanath meets PM Modi, BJP national leader today

பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவருடன் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு

பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவருடன் யோகி ஆதித்யநாத் இன்று சந்திப்பு
உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவரை இன்று சந்தித்து பேசுகிறார்.


புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன்படி அவர் நேற்று டெல்லி சென்றார்.  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இதன்பின்பு, பிரதமர் மோடியை எண் 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 10.45 மணியளவில் யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசுகிறார்.  அதன்பின், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை நண்பகல் 12 மணியளவில் சந்தித்து பேச இருக்கிறார்.

வரும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பா.ஜ.க. அரசின் மந்திரிசபை மாற்றியமைக்கப்பட கூடும் என்றும் யூகங்கள் தெரிவிக்கின்றன.தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கிய 100 மாவட்ட கலெக்டர்களுடன் மோடி பேசுகிறார்
கொரோனாவின் மோசமான பிடியில் சிக்கியுள்ள 100 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
3. சீன துணை மந்திரியுடன் இந்திய தூதர் சந்திப்பு; லடாக்கில் படைகளை திரும்ப பெற வலியுறுத்தல்
சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை மந்திரியை சந்தித்த சீனாவுக்கான இந்திய தூதர் கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்ப பெற வலியுறுத்தினார்.