தேசிய செய்திகள்

காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சாலையோரம் பிணமாக மீட்பு + "||" + Terrorist found dead in Srinagar, police investigate possible terror outfit clashes

காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சாலையோரம் பிணமாக மீட்பு

காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சாலையோரம் பிணமாக மீட்பு
கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதி சாலைப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சோபியான் மாவட்டம் ஷனப்புரா பகுதியை சேர்ந்தவன் அமீர் அகமது மாலிக். 22 வயதான அமீர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது வீட்டை விட்டு வெளியேறி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான அல்-படர் பயங்கரவாத அமைப்பில் அமீர் அகமது மாலி இணைந்தான்.

இந்நிலையில், சோமியான் மாவட்டத்தின் சவுரா பகுதியில் உள்ள ஆன்சர் ஏரிக்கு செல்லும் சாலை அருகே ஒருநபர் உயிரிழந்தநிலையில் கிடப்பதை உள்ளூர்வாசிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சாலை அருகே கிடந்த அந்த உடலை மீட்டு உயிரிழந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் உயிரிழந்தது பயங்கரவாதி அமீர் அகமது மாலிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பயங்கரவாதி அமீரின் உடலை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் பயங்கரவாதி மாலிக் கொல்லப்பட்டு ஏரிசெல்லும் சாலைபகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் 3 இடங்களில் டிரோன் நடமாட்டம்
காஷ்மீரில் ஒரே நாளில் 3 இடங்களில் டிரோன் நடமாட்டம் காணப்பட்டது.
2. காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் ஆய்வு
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதிகளில் முப்படைத் தளபதி பிபின் ராவத் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
3. ஜம்மு மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனை - செல்போன்கள் பறிமுதல்
ஜம்மு மத்திய சிறைச்சாலையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகள் வைத்திருந்த 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
4. காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை
காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
5. காஷ்மீர் என்கவுண்டர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரின் குல்ஹம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.