கேரளாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்: முதல் மந்திரி அறிவிப்பு


கேரளாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்:  முதல் மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Jun 2021 8:08 PM GMT (Updated: 15 Jun 2021 8:08 PM GMT)

கேரளாவில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.



திருவனந்தபுரம்,

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கொரோனா பாதிப்பு விகிதம் அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளார்.

இதன்படி, 8 சதவீதத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு விகிதம் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாடுகளுடன் வழக்கம்போல் செயல்படலாம்.  கடைகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்படும்.

அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும்.  பகுதியளவில் பொது போக்குவரத்து செயல்படும்.  அனைத்து நாட்களிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்.  நாளை முதல் (17ந்தேதி) பார்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்படும்.

கொரோனா பாதிப்பு சூழ்நிலைக்கு ஏற்ப 16ந்தேதிக்கு (புதன்கிழமை) பின்னர் ஊரடங்கில் மாற்றம் ஏற்படும்.  எனினும், கேரளா முழுவதும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் தொடரும் என அவர் கூறியுள்ளார்.


Next Story