சர்வதேச யோகா தினம்: தண்ணீரில் மிதந்து யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
பாட்னா,
இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அரிய கலையான யோகாவை உலகமெங்கும் பரப்பும் நல்லெண்ணத்தில் பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ந்தேதி பேசினார்.
அதனை தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடுவது என முடிவு எடுக்கப்பட்டது. முதல் சர்வதேச யோகா தினம், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 21ந்தேதி கொண்டாடப்பட்டது.
7வது சர்வதேச யோகா தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
இப்போது கொரோனாவின் 2வது அலையை முடிவுக்கு கொண்டு வரும் பெரும் போராட்டத்தில் நாடு ஈடுபட்டுள்ளதால், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலில் இருப்பதால், 7வது சர்வதேச யோகா தினம் எளிமையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர், மத்திய மந்திரிகள் மற்றும் படை வீரர்கள் காலையிலேயே யோகாவில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் மாவட்டத்தில் உள்ள பிந்துசாரா ஏரியில் இருவர் தண்ணீரில் மிதந்து யோகாவில் ஈடுபட்டனர். அக்வா யோகா என்று அழைக்கப்படும் இந்த யோகாவை தண்ணீரில் மிதந்தவாறு அவர்கள் மேற்கொண்டனர்.
இந்த வகை யோகா பயிற்சி உடல் மற்றும் மன ரீதியில் புத்துணர்வை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Odisha: People practice aqua yoga in Bindusagar lake of Bhubaneswar on the occasion of #InternationalDayOfYogapic.twitter.com/a55PXYj9s9
— ANI (@ANI) June 21, 2021
Related Tags :
Next Story