கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 10% கீழ் வந்தது


கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 10%  கீழ் வந்தது
x
தினத்தந்தி 21 Jun 2021 1:38 PM GMT (Updated: 21 Jun 2021 1:38 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,499- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,499 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 16 ஆயிரத்து 893- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்பில் இருந்து 13,596- பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை  குணம் அடைந்தவர்கள்  எண்ணிக்கை 27 லட்சத்து 04 ஆயிரத்து 554- ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 99,693- ஆக குறைந்துள்ளது. மாநிலத்தில் இன்று 77,853- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தொற்று பாதிப்பு விகிதம் 9.63 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

Next Story