மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 6.2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


மராட்டிய மாநிலத்தில் ஒரே நாளில் 6.2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 23 Jun 2021 8:54 PM GMT (Updated: 23 Jun 2021 8:54 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மும்பை,

கொரோனாவால் நாட்டிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் தான். இந்த நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஆனால் ஊசி மருந்து தட்டுப்பாடு காரணமாக இந்த பணியில் தொய்வு ஏற்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 639 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.

இதுகுறித்து நேற்று சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் பிரதிப் வியாஸ் கூறுகையில், “இன்று (நேற்று) நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஒரு நாளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இரவு 7 மணி வரை 6 லட்சத்து 2 ஆயிரத்து 163 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது” என்றார்.

Next Story