தேசிய செய்திகள்

அகிலேஷ் யாதவுக்கு 48-வது பிறந்த நாள்; யோகி ஆதித்யநாத் வாழ்த்து + "||" + 48th birthday of Akhilesh Yadav; Congratulations to Yogi Adityanath

அகிலேஷ் யாதவுக்கு 48-வது பிறந்த நாள்; யோகி ஆதித்யநாத் வாழ்த்து

அகிலேஷ் யாதவுக்கு 48-வது பிறந்த நாள்; யோகி ஆதித்யநாத் வாழ்த்து
உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு நேற்று 48-வது பிறந்த நாள் ஆகும். இதை சமாஜ்வாடி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடினர்.
குறிப்பாக பல இடங்களில் கேக் வெட்டியும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டும், சேவைப்பணிகளில் ஈடுபட்டும் தங்கள் தலைவரின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.அகிலேஷ் யாதவின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சமாஜ்வாடி தலைவர்கள் நேற்று முன்தினம் பழங்கள் மற்றும் பொருட்களை வழங்கினர். இதற்கிடையே அகிலேஷ் யாதவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அகிலேஷ் யாதவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவர் அகிலேஷின் தந்தையும், சமாஜ்வாடி நிறுவனருமான முலாயம் சிங் யாதவின் உடல்நலன் குறித்தும் கேட்டறிந்தார். உடல் நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் முலாயம் சிங் யாதவ் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆட்சி நிர்வாகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், முதல் மந்திரி யோகி ஆதித்நாயத்திற்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
2. சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் : யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று சந்தித்தார்.
4. பிரதமர் மோடி - யோகி ஆதித்யநாத் சந்திப்பு
பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் டெல்லியில் இன்று சந்தித்தார்.
5. பிரதமர் மோடி - யோகி ஆதித்யநாத் நாளை சந்திப்பு
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று டெல்லி சென்றுள்ளார்.