ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை- ராகுல் காந்தி டுவிட்


ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை- ராகுல் காந்தி டுவிட்
x
தினத்தந்தி 2 July 2021 8:34 AM GMT (Updated: 2 July 2021 9:34 AM GMT)

கொரோனா விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை மத்தியில் ஆளும் மோடி அரசு சரிவரக் கையாளவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 

தடுப்பூசி கொள்கை குறித்தும் மத்திய அரசை விமர்சித்து வரும் ராகுல் காந்தி இன்று காலை வெளியிட்ட டுவிட் பதிவில், “''ஜூலை வந்து விட்டது, தடுப்பூசி வரவில்லை. எங்கே தடுப்பூசி'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்திற்கு கடுமையாக பதிலடி கொடுத்துள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் “ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி தகவல்கள் குறித்து நான் ஏற்கெனவே தகவல்களை வெளியிட்டு இருந்தேன். 

ராகுல் காந்திக்கு என்ன தான் பிரச்னை?அந்த தரவுகளை  அவர் படிக்கவில்லையா?  அவருக்கு புரியவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பு மருந்து கிடையாது. காங்கிரஸ் கட்சி தங்கள் தலைமையை மாற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 


Next Story