அசாம் - மிசோரம் எல்லை வன்முறை; அமித்ஷா மீது ராகுல் காந்தி தாக்கு


அசாம் - மிசோரம் எல்லை வன்முறை;  அமித்ஷா மீது ராகுல் காந்தி தாக்கு
x
தினத்தந்தி 27 July 2021 5:16 AM GMT (Updated: 27 July 2021 5:16 AM GMT)

உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

அசாம்-மிசோரம் எல்லையில் நடந்த மோதலில் அசாமை சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறுகையில், 

“மிசோரம், அசாம் இடையிலான எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்காக நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய  விரும்புகிறேன். 

இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


Next Story