“பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது” - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


“பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது” - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 July 2021 10:06 AM GMT (Updated: 27 July 2021 10:06 AM GMT)

பொது இடங்களிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதை தடுக்க உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா காலத்தில் வீடற்றவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் மறுவாழ்வு திட்டங்களை அளிக்கக் கோரியும், தடுப்பூசி செலுத்த கோரியும் டெல்லியை சேர்ந்த குஷ் கல்ரா, பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்தமனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஷா தலைமையிலான அமர்வு முன் விசாரனைக்கு வந்தது. 

அப்போது பொது இடங்களிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது ஒரு சமூக-பொருளாதார பிரச்சினை என்றும் ஏழ்மை  மட்டும் இல்லையென்றால் யாரும் பிச்சை எடுக்க விரும்ப மாட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்தனர். 

மேலும் இந்த பொதுநல மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதால் பிச்சை எடுப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

Next Story