ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு


ராஜஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
x
தினத்தந்தி 5 Aug 2021 3:50 PM GMT (Updated: 5 Aug 2021 3:50 PM GMT)

ராஜஸ்தானில் இன்று ரிக்டரில் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.



சிகார்,

ராஜஸ்தானின் சிகார் நகரில் இன்றிரவு 8.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் சில பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன.  மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  எனினும், இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.


Next Story