காஷ்மீரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய சேவை முடக்கப்படாத சுதந்திர தினம்


காஷ்மீரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இணைய சேவை முடக்கப்படாத சுதந்திர தினம்
x
தினத்தந்தி 15 Aug 2021 9:30 AM GMT (Updated: 2021-08-15T15:00:50+05:30)

சுதந்திரதினத்தை முன்னிட்டு பதற்றமான பகுதிகளில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்படுவது வழக்கமாக இருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகும் இதே நிலைதான் கடந்த ஆண்டு வரை நீடித்ததது. 

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக சுதந்திர தின நாளான இன்று  காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இணைய சேவை  எங்கும் முடக்கப்படவில்லை. ஸ்ரீநகர்  முழுவதும் மக்கள் நடமாட்டத்திற்கு எந்த கட்டுப்பாடுகளும் இன்று விதிக்கப்படவில்லை. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.  

கடந்த 2018- ஆம் ஆண்டு கவர்னர் ஆட்சி அமலில் இருந்த போது  காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்படாமல் சுதந்திர தினம் விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story