தேசிய செய்திகள்

ராகுல்காந்தியின் ‘டுவிட்டர்’ கணக்கை மீண்டும் முடக்க வேண்டும்: பா.ஜனதா + "||" + Rahul Gandhi politicising Dalit girl’s rape, his Twitter account should be locked again: BJP

ராகுல்காந்தியின் ‘டுவிட்டர்’ கணக்கை மீண்டும் முடக்க வேண்டும்: பா.ஜனதா

ராகுல்காந்தியின் ‘டுவிட்டர்’ கணக்கை மீண்டும் முடக்க வேண்டும்: பா.ஜனதா
ராகுல்காந்தியின் ‘டுவிட்டர்’ கணக்கை மீண்டும் முடக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.
அரசியல் ஆதாயம் தேடுகிறார்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட பா.ஜனதா அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் ேஜ.பி.நட்டா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
ராகுல்காந்தியின் அரசியல் சுற்றுலா தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. அவர் அமேதியில் தோற்று விட்டார். அதனால், வயநாடுக்கு ஓடிவிட்டார். மாநிலத்தை மாற்றுவதால், ஒருவரின் நடத்தையோ, உள்நோக்கமோ மாறிவிடப் போவதில்லை.டெல்லியில், சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரத்தை ராகுல்காந்தி அரசியலாக்கி வருகிறார். அற்ப அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற பிரச்சினைகளை அரசியலாக்குவது சரியல்ல.கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதுமான பாதிப்பில் 50 சதவீதம், கேரளாவில் ஏற்பட்டு வருகிறது. இந்த கேரள மாடல், மோசமான நிர்வாகத்துக்கான மாடல்.

இவ்வாறு அவர் பேசினார்.

மீண்டும் முடக்குங்கள்

இதற்கிடையே, பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை அவர்களின் ஒப்புதலுடன் வெளியிட்டதாக ராகுல்காந்தி கூறியிருந்தார். ஆனால் அதை அவர்கள் மறுத்துள்ளனர்.இதனால் ராகுல்காந்தி டுவிட்டர் கணக்கை மீண்டும் முடக்க வேண்டும். அவரது அரசியல் கணக்கை நாட்டு மக்கள் ஏற்கனவே முடக்கி விட்டனர். அதுபோல் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட வேண்டும்.ராகுல்காந்தி பொய் சொல்வதையே வழக்கமாக கொண்டவர். அவரது நம்பகத்தன்மை போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக மேல்-சபை தோ்தலில் பா.ஜனதாவுக்கு, ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கும்: எடியூரப்பா நம்பிக்கை
கர்நாடக மேல்-சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு, ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கும் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. இந்திராகாந்தி பிறந்த தினம்: பிரதமர் மோடி மரியாதை
இந்திராகாந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
3. ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யாவுடன் நிற்பது நமது கடமை - ஜோதிமணி எம்.பி.
தனிநபரோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ கலைஞனை அச்சுறுத்த முடியாது. அச்சுறுத்தவும் கூடாது. அவர்களை அச்சுறுத்துவது ஆபத்தானது என கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
4. நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..!
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
5. வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும்: மந்திரி ஈசுவரப்பா
வருகிற 2023-ம் ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறினார்.