தடியடியில் விவசாயி பலி: நீதி விசாரணை வேண்டும் - அரியானா விவசாயிகள் சங்கம் கோரிக்கை


தடியடியில் விவசாயி பலி: நீதி விசாரணை வேண்டும் - அரியானா விவசாயிகள் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Aug 2021 9:28 PM GMT (Updated: 30 Aug 2021 9:28 PM GMT)

தடியடியில் விவசாயி பலியான சம்பவத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று அரியானா விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சண்டிகார், 

அரியானாவில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி நடக்கிறது. 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள விவசாயிகள் அமைப்பு போராடி வருகிறது.

கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தின்போது போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். இந்த தடியடி தாக்குதலில் ஒரு விவசாயி இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று கர்னல் என்ற இடத்தில் விவசாயிகள் பெரும் திரளாக கூடி, போலீசாரின் தடியடியை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது செப்டம்பர் 6-ந்தேதிக்குள் தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், “இறந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம நிவாரணம் வழங்க வேண்டும், காயம் அடைந்த விவசாயிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க வேண்டும், தடியடி நடத்திய போலீசார் மீது உதவி நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

Next Story