சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்ய குழு அமைத்தார் சோனியாகாந்தி


சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்ய குழு அமைத்தார் சோனியாகாந்தி
x
தினத்தந்தி 3 Sep 2021 8:51 PM GMT (Updated: 2021-09-04T02:21:23+05:30)

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்ய காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கொண்ட குழுவை சோனியாகாந்தி நேற்று அமைத்தார்.

புதுடெல்லி,

2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், எஸ்.சி., எஸ்.டி. தவிர இதர சாதியினர் பற்றிய கணக்கெடுப்பு இடம்பெறாது என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது. ஆனால், எல்லா சாதியினரை பற்றிய கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம், சமாஜ்வாடி, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

சமீபத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியது. இந்தநிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவகாரங்களை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி நேற்று அமைத்தார். 

இந்த குழுவின் அமைப்பாளராக வீரப்ப மொய்லி செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ், ஆர்.பி.என்.சிங், பி.எல்.புனியா, குல்தீப் பிஷ்னோய் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

Next Story