விவசாயத்தின் மீது மத்திய அரசு தேவையான கவனம் செலுத்தவில்லை-சரத் பவார் குற்றச்சாட்டு


விவசாயத்தின் மீது மத்திய அரசு தேவையான கவனம் செலுத்தவில்லை-சரத் பவார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Sep 2021 8:41 PM GMT (Updated: 5 Sep 2021 8:41 PM GMT)

மத்திய அரசின் கவனக்குறைவால் விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என சரத்பவார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

புனே, 

புனேயில் உள்ள ஜுன்னார் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் வேளாண்துறை மந்திரியுமான சரத்பவார் கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நான் 10 ஆண்டுகள் மத்திய வேளாண்துறை மந்திரியாக இருந்தபோது விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்தேன். இந்த விவசாய சமூகத்தின் முன்பு பல்வேறு கேள்விகள் உள்ளன. விவசாய விளைபொருட்களின் விலைகள் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் விரக்தியால் தாங்கள் கஷ்டப்பட்டு காத்த விளைபொருட்களை சாலையில் வீசுகின்றனர். விளைபொருட்களின் உள்ளீட்டு செலவை கூட அவர்களால் திரும்பப்பெற முடியவில்லை. இதனால் அனைவரும் கவலையான சூழ்நிலையில் உள்ளனர்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தால், அவர்கள் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், ஏற்றுமதியையும் செய்வார்கள். அது விவசாயிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, விவசாயத்தின் மீது மத்திய அரசு தேவையான கவனம் செலுத்தவில்லை. 

அதன் விளைவாக, விவசாய விளைபொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன. இதற்கு விதிவிலக்கு கரும்பு மட்டுமே, ஏனெனில் கடந்த சில நாட்களாக சர்க்கரை விலை அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் கரும்புக்கு நல்ல விலை கிடைக்கும்” இவ்வாறு அவர் கூறினார்.


Next Story