தேசிய செய்திகள்

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை: சுப்ரீம் கோர்ட்டு + "||" + SC rejects plea to direct government to start door-to-door vaccination

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை: சுப்ரீம் கோர்ட்டு

வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை: சுப்ரீம் கோர்ட்டு
வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று யூத் பார் அசோசியேசன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், நாடு முழுவதும் 60 சதவீதம் பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. நகர்ப்புறங்களுக்கும், கிராமப் பகுதிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசம் உள்ளது. வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசியை செலுத்துவது சாத்தியமில்லை. இது அரசின் கொள்கை முடிவு. அதில் தலையிட்டு, வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். உரிய அரசு அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கவும் அறிவுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து நடந்த மற்றொரு பொதுநல மனுவும் இதே அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் ஒவ்வொரு கொரோனா மரணத்தையும் மருத்துவ அலட்சியமாகக் கருதி குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட அனைத்து உயிரிழப்பையும் மருத்துவ அலட்சியத்தால் ஏற்பட்டதாக கருத முடியாது என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் 5 ஆயிரம் ஆசிரியர்கள்
கேரளாவில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மதத்தை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. 2 ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை அதிகம்: மத்திய சுகாதார மந்திரி தகவல்
2 ‘டோஸ் ’ கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.
3. கொரோனா தீவிரத்தை குறைக்கும் பைசர் மாத்திரைகள்; ஆய்வில் புதிய தகவல்
அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறுவதற்காக இதன் இடைக்கால ஆய்வு முடிவுகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
4. அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு எப்.டி.ஏ. அங்கீகாரம் அளித்துள்ளது.
5. மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 106.85 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.