தேசிய செய்திகள்

மராட்டியம்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி + "||" + 4 killed after car hits auto-rickshaw in Maharashtra

மராட்டியம்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி

மராட்டியம்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் அல்ஹஸ்நகர் பகுதியை சேர்ந்த வர்ஷ வலிஷா (51), அவரது மனைவி ஆர்த்தி வலிஷா (41), மற்றும் மகன் ராஜ் வலிஷா (12) ஆகிய 3 பேரும் அமீர்நாத் பகுதியில் நேற்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றனர். 

விழாவில் பங்கேற்று விட்டு அவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஆட்டோ மூலம் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பாலி என்ற கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது சாலையின் எதிரே வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. 

இந்த கோர விபத்தில் வர்ஷ வலிஷா, ஆர்த்தி வலிஷா, ராஜ் வலிஷா மற்றும் ஆட்டோ டிரைவர் என ஆட்டோவில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்திற்கு காரணமான கார் டிரைவர் தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியம்: உத்தவ் தாக்கரே உடன் சரத் பவார் சந்திப்பு
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தார்.
2. மராட்டிய முதல்-மந்திரியை சந்தித்த இங்கிலாந்து தூதர்
இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் இலிஸ் மராட்டிய முதல் - மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.
3. மராட்டியத்தில் இன்று மேலும் 3,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் இன்று மேலும் 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 3,626 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. மராட்டியத்தின் கோலபூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்
மராட்டியத்தில் கோலபூர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.