செப். 24ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி


செப். 24ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரமதர் மோடி
x
தினத்தந்தி 20 Sep 2021 5:55 PM GMT (Updated: 20 Sep 2021 5:55 PM GMT)

செப்டம்பர் 24-ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரமதர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி, 

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து 'குவாட்' அமைப்பை உருவாக்கி உள்ளன.

இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செப்டம்பர் 24-ம் தேதி நடைபெற உள்ள 'குவாட்' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24-ம் தேதி சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது.

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளார்.

Next Story