ஓ.பி.சி. கணக்கெடுப்புக்கு மறுப்பு, பா.ஜ.க.வின் சுயரூபத்தை காட்டுகிறது: மாயாவதி


ஓ.பி.சி. கணக்கெடுப்புக்கு மறுப்பு, பா.ஜ.க.வின் சுயரூபத்தை காட்டுகிறது: மாயாவதி
x
தினத்தந்தி 24 Sep 2021 9:53 PM GMT (Updated: 24 Sep 2021 9:53 PM GMT)

ஓ.பி.சி. கணக்கெடுப்புக்கு மறுப்பு, பா.ஜ.க.வின் சுயரூபத்தை காட்டுகிறது என்று மாயாவதி கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், ‘இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது நிர்வாகரீதியாக கடினமானது, சிக்கலானது. அந்தப் பிரிவினரின் கணக்கெடுப்பை நடத்துவது இல்லை என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ‘சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது மிகவும் கவலைக்குரியது. இது பா.ஜ.க.வின் தேர்தல் நலன் சார்ந்த ஓ.பி.சி. அரசியலின் சுயரூபத்தை காட்டுகிறது. அவர்களின் சொல்லுக்கும், செயலுக்கும் உள்ள வித்தியாசத்தையும் வெளிப்படுத்துகிறது.

எஸ்.சி., எஸ்.டி. கணக்கெடுப்பைப் போல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, நாட்டில் வலுப்பெற்று வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் மத்திய அரசின் மறுப்பு, அந்த பிரிவினரை பாதிக்கும்’ என்று கூறியுள்ளார்.


Next Story