மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்: தேவேந்திர பட்னாவிஸ்


மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்: தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 25 Sep 2021 10:25 PM GMT (Updated: 25 Sep 2021 10:25 PM GMT)

மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தொழிலாளர்கள் பிரச்சினை
தொழிலாளர் தலைவராக இருந்த மறைந்த அன்னாசாகிப் பாட்டீலின் 88-வது பிறந்தநாள் விழா நவிமும்பையில் நடந்தது. விழாவில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூடியிருந்த இந்த விழாவில், அவர் பேசியதாவது:-

எனது அரசுக்கு கூடுதல் நேரம் கிடைத்து இருந்தால் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கும். மகா விகாஸ் அகாடி அரசு கடந்த 2019-ல் ஆட்சிக்கு வந்தது. சுமை தூக்கும் தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்கும் வாய்ப்பு தற்போது இந்த அரசுக்கு உள்ளது. பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புகிறேன்.

மீண்டும் ஆட்சி
ஒருவேளை பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் நமக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அது பிரச்சினையல்ல. அரசியலுக்கு இடமளிக்காமல் அனைத்து கட்சிகளும் சேர்ந்து சுமை தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஜனநாயகத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஒரு பகுதி தான். மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி புபேந்திர யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story