கர்நாடகாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு


கர்நாடகாவில் நிலநடுக்கம்:  ரிக்டரில் 3.6 ஆக பதிவு
x
தினத்தந்தி 12 Oct 2021 3:37 AM GMT (Updated: 12 Oct 2021 3:37 AM GMT)

கர்நாடகாவின் குல்பர்காவில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

கலபுரகி,

கர்நாடகாவின் குல்பர்கா பகுதியில் இன்று காலை 8.06 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பாதுகாப்பு பகுதிகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

கடந்த ஞாயிற்று கிழமை கர்நாடகாவின் குல்பர்கா நகரில் காலை 6 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி இருந்தது.  இதனால், கடந்த 2 நாட்களில் கர்நாடகாவின் குல்பர்காவில் 2வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


Next Story