தேசிய செய்திகள்

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து + "||" + PM Modi congratulates the people of the country on Ayudha Puja

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆயுத பூஜை வாழ்த்து
ஆயுத பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், ‘‘நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகள். அநீதியை அழித்ததன் அடையாளம், துர்கா. பெண் சக்தியின் கடவுள் வடிவம். தேச கட்டுமானத்தில் பெண்கள் அதிக மரியாதையும், சம பங்களிப்பும் பெறக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்போம்’’ என்று கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘அனைவருக்கும் நல்ல உடல்நிலையும், மகிழ்ச்சியும், வளமும் அமைய துர்க்கையை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், ‘‘துர்கா தேவியின் ஆசி, நமக்கு எப்போதும் இருக்கட்டும். அந்த ஆசி, சமூகத்தில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் பெருக்கட்டும். அனைவரது வாழ்க்கையும் ஒளிர வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
2. மனித உரிமை பிரச்சினையை சிலர் தேர்ந்தெடுத்து அணுகுகின்றனர் ; பிரதமர் மோடி விமர்சனம்
குடிமக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
3. நரேந்திர மோடி ஜனநாயகம் மிக்க தலைவர்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
ஜனநாயக முறைப்படியே தனது அமைச்சரவையை பிரதமர் மோடி நடத்துவதாக அமித்ஷா கூறினார்.
4. கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் : மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
5. ஜப்பான் உடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த விருப்பம், பிரதமர் நரேந்திர மோடி
ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இணைந்து கூட்டுறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்து உள்ளார்.