தேசிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் யார்? கட்சியின் காரிய கமிட்டி இன்று கூடுகிறது + "||" + At Key Congress Meet Today, A Decision On Elections For New Chief

காங்கிரஸ் தலைவர் யார்? கட்சியின் காரிய கமிட்டி இன்று கூடுகிறது

காங்கிரஸ் தலைவர் யார்? கட்சியின் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
2019-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
புதுடெல்லி,

ராகுல் காந்தி காங்கிரஸ்  கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு , கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை சோனியா காந்தி வகித்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது.  கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும்  இந்தக் கூட்டத்தில் அடுத்த தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இன்று முக்கிய முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது. மேலும் ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல - பிரசாந்த் கிஷோர்
காங்கிரஸ் கட்சியின் தலைமை என்பது ஒரு தனிநபரின் தெய்வீக உரிமை அல்ல என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
2. ‘சென்னை மழை கவலை அளிக்கிறது’ - ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு
சென்னையில் தொடர் மழை கவலை அளிப்பதாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
3. மாநிலங்கள் உருவான தினம்; ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து
1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன.
4. கோவாவில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி
கோவாவிற்கு சென்றுள்ள ராகுல் காந்தி அங்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
5. பிரதமர் மோடி வலிமையடைய காங்கிரஸ் தான் காரணம் மம்தா பானர்ஜி தாக்கு
காங்கிரசால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று கஷ்டப்படுகிறது என்று மம்தா பானர்ஜி கூறினார்.