கேரளாவில் மழை: பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைப்பு - மந்திரி சிவன் குட்டி தகவல்


கேரளாவில் மழை: பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைப்பு - மந்திரி சிவன் குட்டி தகவல்
x
தினத்தந்தி 18 Oct 2021 1:27 AM GMT (Updated: 18 Oct 2021 1:27 AM GMT)

கேரளாவில் பலத்த மழை காரணமாக பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மந்திரி சிவன் குட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி 23 பேர் பலியாகி உள்ளனர். 

கனமழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என மாநிலம் முழுவதும் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் இரவு-பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பலத்த மழை காரணமாக மாநிலத்தில் பிளஸ்-1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மந்திரி சிவன் குட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

கேரள பொது கல்வித்துறை மந்திரி சிவன் குட்டி திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது-

கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்த பிளஸ்-1 தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

அதே போல் கேரள பல்கலைக்கழகம், எம்.ஜி.பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைகழகங்களின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story