இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்டும் - மத்திய இணை மந்திரி


இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்டும் - மத்திய இணை மந்திரி
x
தினத்தந்தி 20 Oct 2021 12:22 AM GMT (Updated: 20 Oct 2021 12:22 AM GMT)

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை விரைவில் 100 கோடி எண்ணிக்கையை எட்டும் என்று மத்திய இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி  போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பவார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை விரைவில் 100 கோடி எண்ணிக்கையை எட்டும். நம் நாட்டில் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் தொகை தடுப்பூசி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பில் உள்ள தகவலின் படி, இந்தியாவில் இதுவரை 99 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் அதிக அளவிளான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. மூன்றாம் அலைக்கான வாய்ப்பும் உள்ளது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கேரளா மற்றும் மராட்டியத்தில் இன்னும் கொரோனா பாதிப்புகள் குறையவில்லை. நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் தேவைக்கு ஏற்ப பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. 2 முதல் 18 வரையிலான வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்’ என்றார்.

Next Story