பண்டிகை காலத்தில் மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும்: பிரதமர் மோடி


பண்டிகை காலத்தில் மக்கள் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும்: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 24 Oct 2021 8:05 AM GMT (Updated: 24 Oct 2021 8:05 AM GMT)

பண்டிகை காலத்தில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

82-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

“எனது நாட்டு மக்களின் திறமை எனக்கு தெரியும். மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த ஒரு வாய்ப்பையும் நமது சுகாதார ஊழியர்கள் தவறவிடவில்லை என்பதையும் நான் அறிவேன். நமது சுகாதார ஊழியர்கள், தங்களுடைய கடுமையான உழைப்பாலும், மன உறுதிப்பாட்டாலும் ஒரு புதிய முன்மாதிரியை ஏற்படுத்தி உள்ளனர். 100 கோடி தடுப்பூசி தவணைகளை செலுத்திய பின்னர் இன்று நம் தேசத்தில் புதிய உற்சாகம், புதிய சக்தி பெருக்கெடுத்து  கொண்டிருக்கிறது

தடுப்பூசி திட்டத்தில்  இந்தியா அடைந்த வெற்றி நாட்டின் வல்லமையை பறைசாற்றுகிறது. 100 கோடி தடுப்பூசிக்கு பின் எண்ணற்ற தன்னம்பிக்கை கதைகள் அடங்கியுள்ளன.  இந்தியா எப்போதும் உலக அமைதிக்காக பணியாற்றி உள்ளது. வறுமை ஒழிப்பு, தொழிலாளர் நலன் உள்ளிட்ட விவகாரங்களில் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். போலீசில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2014ல் 1.05 லட்சமாக இருந்தது. இது தற்போது 2.15 லட்சமாக அதிகரித்துள்ளது.

பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களை வாங்கினால் ஏழை வியாபாரிகளின் வீட்டில் பிரகாசம் ஏற்படும். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்.31 தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு செயலிலாவது நாம் ஈடுபட வேண்டும். அனைத்து தேவைகளுக்கும் ஏற்ப டிரோன்கள் களமிறக்கப்படும். கோவிட் தடுப்பூசி விநியோகத்திற்கு டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. போக்குவரத்திற்கும், வீடுகளில் பொருட்கள் விநியோகத்திற்கும், அவசர காலங்களில் உதவி செய்யவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் டிரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க நாடு முயற்சி செய்து வருகிறது. மத்திய அரசின் புதிய டிரோன் கொள்கையை நாட்டின் இளைஞர்கள் உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார். 

Next Story