அசாம்: மின்சாரம் தாக்கி யானை உட்பட 4 விலங்குகள் உயிரிழப்பு!


அசாம்: மின்சாரம் தாக்கி யானை உட்பட 4 விலங்குகள் உயிரிழப்பு!
x
தினத்தந்தி 26 Oct 2021 8:40 AM GMT (Updated: 26 Oct 2021 8:40 AM GMT)

அசாம் தேசிய பூங்காவில் மின்சாரம் தாக்கி யானை உட்பட 4 விலங்குகள் உயிரிழந்துள்ளது.

அசாம்,

அசாம் மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா உள்ளது. இங்கு யானை ஒன்றின் காலில் கட்டப்பட்டிருந்த சங்கிலி ஒன்று மின் கம்பத்தில் சிக்கியது. சங்கிலி மின் கம்பத்தில் சிக்கியதால், யானை அதனை இழுக்க முயன்றது. யானையின் இழுப்பிற்கு தாக்குபிடிக்க முடியாத மின் கம்பமானது சரிந்து விழுந்தது. 

மின் கம்பம் சரிந்து விழுந்ததால், மின்சார வயர்களில் யானை, மான் மற்றும் இரண்டு காட்டுப்பன்றிகள் சிக்கின. இதில் யானை உட்பட 4 விலங்குகளும் உயிரிழந்தன. இச்சம்பவம்  பூங்காவின் புராபஹர் எல்லைக்கு உட்பட்ட ஹதி கேம்ப் பகுதியில் நடந்துள்ளது.

இதுகுறித்து காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், பூங்காவிற்குள் இருக்கும் மின்கம்பிகளை மாற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. ஆனால் பணியானது இன்னும் முடியாமல் உள்ளதே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறினார்.



Next Story