எரிபொருள் விலை உயர்வு; ஒடிசாவில் பி.ஜே.டி. தொண்டர்கள் போராட்டம்


எரிபொருள் விலை உயர்வு; ஒடிசாவில் பி.ஜே.டி. தொண்டர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2021 8:22 AM GMT (Updated: 1 Nov 2021 8:22 AM GMT)

எரிபொருள் விலை உயர்வை முன்னிட்டு ஒடிசாவில் பிஜு ஜனதாதள தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


புவனேஸ்வர்,


நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது.  பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டர் ஒன்றுக்கு ரூ.106.35க்கும் மற்றும் டீசல் விலை ரூ.102.59க்கும் விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று சமையல் எரிவாயு விலையும் அதிரடியாக உயர்ந்து வருகிறது.  வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.260க்கும் கூடுதலாக உயர்ந்து உள்ளது.  இதன் விற்பனை விலை ரூ.2 ஆயிரத்திற்கும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.  எனினும், வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கான விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.915.50க்கு விற்பனையாகிறது.

இந்த நிலையில், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பிஜு ஜனதாதள தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.  அவர்கள் சிலிண்டரை உயர்த்தி பிடித்தும், மண் அடுப்பில் சமையல் செய்வது போன்றும் மற்றும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story