ஜம்மு காஷ்மீர்; ஸ்ரீநகரில் மருத்துவ மனை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு


ஜம்மு காஷ்மீர்; ஸ்ரீநகரில் மருத்துவ மனை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 5 Nov 2021 11:25 AM GMT (Updated: 2021-11-05T17:27:05+05:30)

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. ஸ்ரீநகரில் ஸ்கிம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையடுத்து, குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சிறிய அளவில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதாக  பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் அதிக அளவில் இருந்ததால், இந்த சூழலை பயன்படுத்தி பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டதாக  போலீசார் தெரிவித்தனர்.  

துப்பாக்கிச்சண்டையின் போது காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக வெளிமாநிலத்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால், கூடுதலாக 50 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story