காஷ்மீரில் புதிய நெடுஞ்சாலைப் பணி: நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்!


காஷ்மீரில் புதிய நெடுஞ்சாலைப் பணி: நிதின் கட்காரி அடிக்கல் நாட்டுகிறார்!
x
தினத்தந்தி 24 Nov 2021 4:21 AM GMT (Updated: 24 Nov 2021 4:21 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் 25 புதிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீரில் 25 புதிய தேசிய நெடுஞ்சாலைகள் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி. 

11,721 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மொத்தம் 257 கி.மீ தூரத்துக்கு இந்த சாலைகள் அமைக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலைகள் மூலமாக பாதுகாப்பு படைகள் விரைவாக பயணிக்க முடியும். மேலும், விவசாயம், தொழிற்சாலை மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றிற்கு புதிதாக அமைக்கப்பட உள்ள நெடுஞ்சாலை பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாவட்ட தலைநகரங்களுக்கு செல்லும் முக்கிய சாலைகளை ஒன்றிணைக்கும் விதத்தில் இந்த புதிய தேசிய நெடுஞ்சாலைகள்  அமைக்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story