தேசிய செய்திகள்

குர்கானில் காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறப்பு + "||" + All Schools In Gurgaon To Reopen Tomorrow After Being Shut Over Air Pollution

குர்கானில் காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறப்பு

குர்கானில் காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறப்பு
குர்கானில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில்  கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல அதிகரிக்க தொடங்கியது.தீபாவளிக்குப் பின்னர் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு மிகவும் மோசமடைந்தது. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி உள்ளனர். 

இதனால் டெல்லியானது மோசமான காற்றுமாசுபாட்டின் காரணமாக பள்ளிகளை மூடியதுடன், கட்டுமான நடவடிக்கைகளை தடை செய்தது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியது.

தேசிய தலைநகருக்கு அருகில் உள்ள நான்கு ஹரியானா மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் முதலில் நவம்பர் 17 வரை மூடப்பட்டன. டெல்லியில் நச்சுப் புகை மற்றும் மோசமான காற்றின் தரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தேசிய தலைநகர் பிரதேசத்தின் அருகிலுள்ள மாவட்டங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டது.

ஹரியானாவின் குருகிராம், பரிதாபாத், சோனேபட் மற்றும் ஜஜ்ஜார் மாவட்டங்களில் பள்ளிகளை மூடுவதுடன், கட்டுமானப் பணிகள், குப்பைகளை எரித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டன.

இந்த நிலையில் குர்கானில் காற்றுமாசு ஓரளவு குறைந்துவருவதால், அங்கு அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிவித்த குர்கானின் துணை ஆணையர் டாக்டர் யாஷ் கார்க், குர்கானில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி நாளை முதல் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெறும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு
கேரளாவில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
2. டெல்லியில் நவ.1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு...!
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. 1-ந்தேதி பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
4. ஒடிசாவில் 18 மாதங்களுக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறப்பு!
ஒடிசாவில் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
5. கர்நாடகாவில் தொடக்கப்பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பு
கர்நாடகாவில் தொடக்கப்பள்ளிகள் வரும் அக்டோபர் 25 முதல் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.