இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது - ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு


இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது - ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 27 Nov 2021 2:52 PM GMT (Updated: 27 Nov 2021 2:52 PM GMT)

இந்துக்களின் எண்ணிக்கை, வலிமை குறைந்து வருகிறது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், இந்துக்களின் எண்ணிக்கை மற்றும் பலம் குறைந்துள்ளதை நீங்கள் பார்க்கிறீர்கள்... அல்லது இந்துத்துவ உணர்ச்சிகள் குறைந்துள்ளதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்துக்கள் இந்துக்களாக இருக்க வேண்டுமானால் பாரதம் அகண்ட பாரதமாக மாறவேண்டும்’ என்றார்.

Next Story