பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்


பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2021 3:06 AM GMT (Updated: 2021-11-28T08:36:30+05:30)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந்தேதி(நாளை) தொடங்கி, அடுத்த மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மூத்த மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story