தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் சாலை விபத்து: பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு + "||" + Road accident in West Bengal: Prime Minister Modi announces compensation

மேற்கு வங்காளத்தில் சாலை விபத்து: பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் சாலை விபத்து:  பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு
மேற்கு வங்காள சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவித்து உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், புல்பாரி நகரில் நெடுஞ்சாலையில், இறந்தவர் உடல் மற்றும் 35 பேருடன் சென்ற மினி டிரக் ஒன்று மற்றொரு டிரக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 6 பேர் உயிரிழந்தனர்.

போலீசார் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரே வந்த வாகனம் தெரியாததால், இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

சாலை விபத்தில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து கடும் வேதனை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய விரும்புவதாகவும் தெரிவித்துளார். 

இதனை தொடர்ந்து, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி இன்று அறிவித்து உள்ளார்.  இதேபோன்று, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் 7 இடங்களில் அடுத்த மாதம் அகழாய்வு பணி தொடங்க இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. டெல்லி அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தினவிழாவில் இடம்பெறும்
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
3. மாநகராட்சி தேர்தல்: சென்னையில் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு தமிழக அரசு அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
5. மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.