விமான நிலையங்களில் விரைவில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் பயணிகளுக்கு அனுமதி
இந்தியாவின் 4 விமான நிலையங்களில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
புதுடெல்லி,
இந்தியாவின் 4 விமான நிலையங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் போர்டிங் பாஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாரணாசி, புனே, கொல்கத்தா மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களில் பையோமெட்ரிக் போர்டிங் நடைமுறை மூலம் பயணிகள் விமான பயணம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே. சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை என்இசி கார்பரேஷன் (NEC Corporation) நிறுவனத்திடம் இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கியுள்ள நிலையில், படிப்படியாக நாட்டின் மற்ற விமான நிலையங்களுக்கும் பையோமெட்ரிக் போர்டிங் முறை விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story