தமிழக-கேரள எல்லையில் போதை விருந்து; 20 பேர் அதிரடி கைது!
தமிழக-கேரள எல்லையில் போதை விருந்தில் ஈடுபட்ட 20 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூவார்,
தமிழக கேரள எல்லையான குமரி மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளாவின் பூவார் பகுதியில் இருக்கும் சொகுசு விடுதியில் போதை விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கலால் துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல அங்கு சென்று போதை கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர்.
போலீசார் சோதனையில் ஈடுபட்டு 20 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சொகுசு விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
ரூ.100, 1500, 2000 என பல வித கட்டணங்களில் போதை விருந்து நடைபெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதை கும்பல், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் உருவாக்கி இருக்கும் குழுக்கள் மூலம் போதை விருந்து பற்றி தகவல் கொடுத்து பயணிகளை வரவழைத்துள்ளனர். வார இறுதிநாட்களில் இது தொடர்கதையாக நடந்து வந்துள்ளது.
Related Tags :
Next Story