2001-நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு மோடி அஞ்சலி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Dec 2021 6:02 AM GMT (Updated: 13 Dec 2021 6:02 AM GMT)

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.


புதுடெல்லி,

லஷ்கர்-இ-தொய்பா  மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்பை கொண்ட தீவிரவாதிகளின் 5 பேர் கொண்ட குழு, டிசம்பர் 13, 2001 அன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேர் வீரமரணம் அடைந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி தன்னிடைய டுவிட்டரில் பதிவில், " 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினர் அனைவருக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தேசத்துக்கான சேவையும், உச்சபட்ச தியாகமும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்வேகம் அளித்து வருகிறது" என்று பிரதமர் பதிவிட்டுள்ளார்.


Next Story