குதிரையில் வந்து இறங்கிய மணமகள்...! அதிர்ச்சியில் மணமகன் குடும்பம்
பீகாரில் கயாவில் உள்ள மணமகன் வீட்டிற்குத் திருமணக் கோலத்தில் மணமகள் குதிரையில் சென்ற சம்பவம் வீடியோ மூலம் வைரலாக பரவி வருகிறது.
கயா
இண்டிகோ ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருபவர் அனுஷ்கா குஹா. இவர் பீகாரில் கயாவில் உள்ள சிஜூர் பகுதியை சேர்ந்த நபரைத் திருணம் செய்ய முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில், மணமகள் அனுஷ்கா குஹா தனது திருமண நாளன்று கல்யாண கோலத்தில், கயாவில் உள்ள மணமகன் வீட்டிற்குக் குதிரையில் சென்ற வீடியோ வைரலாகி உள்ளது.
இதில், மணமகளின் குடும்பத்தினர், நண்பர்கள், என ஒன்று கூடி வழி நெடுக, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மணமகன் வீட்டிற்குச் சென்றனர்.
இதுகுறித்து மணமகள் தாயார் சுஸ்மிதா கூறியதாவது:-
சிறுவயதிலிருந்தே, மாப்பிள்ளை மட்டும் ஏன் குதிரையில் ஏறி மணமகள் வீட்டுக்குச் செல்கிறார்கள் என்று அனுஷ்கா கேள்வி எழுப்புவார். ஏன் அதற்கு மாறாக மணமகள் குதிரையில் செல்ல முடியாத? என்று கேட்பார்.
பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படும் மரபுகள் என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனால் அவளை ஒருபோதும் திருப்திப்படுத்த முடியவில்லை. அவள் எப்பொழுதும் மரபை உடைத்து அதற்கு நேர்மாறாக செயல்படுவேன்’ என்று கூறுவார் என கூறினார்.
#WATCH बिहार: गया में एक दुल्हन ने घोड़ी पर चढ़कर अपनी बारात निकाली। (13.12) pic.twitter.com/7MmW7klciq
— ANI_HindiNews (@AHindinews) December 14, 2021
Related Tags :
Next Story