டெல்லியில் வேகமெடுக்கும் ஒமைக்ரான்: இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 213 ஆக உயர்வு...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 22 Dec 2021 5:02 AM GMT (Updated: 22 Dec 2021 5:02 AM GMT)

இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பரவ தொடங்கி உள்ளது.  

இதனிடையே நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதன்படி டெல்லி - 57, மராட்டிய மாநிலம் - 54, , தெலங்கானா - 24, கர்நாடகா - 19, ராஜஸ்தான் - 18, , கேரளா - 15, குஜராத் - 14, ஜம்மு-காஷ்மீர் - 3, ஒடிசா -2, உத்தரப்பிரதேசம் - 2, ஆந்திரா - 1, சண்டிகர் - 1, லடாக் - 1, மேற்கு வங்காளம் - 1,
தமிழ்நாடு - 1
ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 57 பேரில் இதுவரை 17 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 




Next Story