ராமர் கோவிலின் முக்கிய கட்டுமான பணிக்கான கற்களை தேர்வு செய்யும் நிபுணர்கள்


ராமர் கோவிலின் முக்கிய கட்டுமான பணிக்கான கற்களை தேர்வு செய்யும் நிபுணர்கள்
x
தினத்தந்தி 1 Jan 2022 11:54 PM GMT (Updated: 1 Jan 2022 11:54 PM GMT)

சிமெண்ட் பயன்படுத்தப்படாது என்பதால், முக்கியமான கட்டுமானப் பணிக்கு முறையான கற்களைத் தேர்ந்தெடுப்பது பொறியாளர்களுக்கு பெரும் பணியாக இருக்கும்.

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுமானத்தில் சிமெண்ட் பயன்படுத்தப்படாது என்பதால், முக்கியமான கட்டுமானப் பணிக்கு முறையான கற்களைத் தேர்ந்தெடுப்பது பொறியாளர்களுக்கு பெரும் பணியாக இருக்கும்.

இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் முதல் கோவிலின் முக்கிய பகுதிகளில் கற்கள் கட்டுமான பணியை கட்டுமானக் குழு தொடங்க உள்ளது. கோவிலின்  முக்கியமான கட்டுமானப் பகுதிகளில் கற்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால், இது தொடர்பாக நிபுணர்களின் கருத்தைப் பெற ராமர் கோயில் கட்டுமானக் குழு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீரத் சேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்களின் கூற்றுப்படி, கற்களை மட்டுமே உள்ளடக்கிய கோயிலின் முக்கிய பகுதிகள் நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும். இந்த வல்லுநர்கள் கற்களின் உழைக்கும் தன்மையை பொறுத்து அவற்றின் பயன்பாட்டை முடிவு செய்வார்கள். 

“ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவின் கற்கள் வெவ்வேறு குணங்களைக் கொண்டுள்ளன. தென்னிந்திய மாநில கற்கள் அதிக சுமை தாங்கும் திறன் கொண்டவை என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, எந்தக் கல் எங்கு வைக்கப்படும் என்பதை நிபுணர்கள் முடிவு செய்வார்கள், ”என்று அறக்கட்டளையின்  உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கோவில் இரண்டு தளங்களை கொண்டு கட்டப்பட்டு வருகிறது. சிமெண்ட் மற்றும் இரும்பு பயன்படுத்தப்படாமல், முழுவதுமாக கற்களையே மையமாக வைத்து கட்டப்படுகிறது. 125 அடி உயரமுள்ள இக்கோயிலில் இரண்டு தளங்களிலும் தலா 106 தூண்கள் அமைக்கப்பட உள்ளது.


Next Story