அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் சிறப்பு விடுமுறை; முதல்-மந்திரி உத்தரவு!


அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் சிறப்பு விடுமுறை; முதல்-மந்திரி உத்தரவு!
x
தினத்தந்தி 2 Jan 2022 2:53 PM GMT (Updated: 2 Jan 2022 2:53 PM GMT)

அசாம் மாநிலத்தில் பெற்றோருடன் நேரத்தை செலவிட 4 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் பெற்றோருடன் நேரத்தை செலவிட 4 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில், 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று கடந்த மாதம் 7ந்தேதியன்று அம்மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“அரசு ஊழியர்கள் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தங்கள் பெற்றோருடனும் சகோதர சகோதரிகளுடனும் நேரத்தை செலவிடுமாறு கேட்டு கொள்கிறேன். அந்த இரு தினங்கள் சிறப்பு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் புதிய அசாமை புதிய இந்தியாவை கட்டமைக்க ஒத்துழைக்குமாறு வெண்டுகோள் விடுக்கிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளை தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து வருவதால், அடுத்த வாரம் அரசு  ஊழியர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story