திருமணம் செய்ய தப்பி ஓடிய நக்சலைட் ஜோடி கொலை...!


திருமணம் செய்ய தப்பி ஓடிய நக்சலைட் ஜோடி கொலை...!
x
தினத்தந்தி 7 Jan 2022 9:37 PM GMT (Updated: 2022-01-08T03:07:32+05:30)

திருமணம் செய்ய தப்பி ஓடிய நக்சலைட் ஜோடி கொலை செய்யப்பட்டனர்.

பிஜாப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் கங்காலூர் பகுதியை சேர்ந்த நக்சலைட் கம்லு புனம். அதே பகுதியை சேர்ந்த பெண் நக்சலைட் மங்கி. இருவரும் காதலித்து வந்தனர்.

திருமணம் செய்து கொள்வதற்காக, நக்சலைட் முகாமில் இருந்து தப்பி ஓடினர். இருப்பினும், அவர்களை நக்சலைட்டுகள் தேடி கண்டுபிடித்தனர். மக்கள் நீதிமன்றம் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, இருவரும் போலீஸ் உளவாளிகள் என்று நக்சலைட்டுகள் குற்றம் சாட்டினர். பின்னர், இருவரையும் கொடூரமாக கொலை செய்தனர்.

கொல்லப்பட்ட காதல் ஜோடி, 10-க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் ஆவர். இதுபோல், அதே பகுதியில் மற்றொரு நபரையும் நக்சலைட்டுகள் கொலை செய்தனர்.

Next Story