மராட்டிய ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில திருத்தங்கள் வெளியீடு


மராட்டிய ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில திருத்தங்கள் வெளியீடு
x
தினத்தந்தி 9 Jan 2022 9:49 AM GMT (Updated: 9 Jan 2022 9:49 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில திருத்தங்களை அரசு அறிவித்து உள்ளது.



புனே,

மராட்டியத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது.

இதன்படி, நாளை (ஜனவரி 10) முதல் இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.  5 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்படுகிறது.

சலூன் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்கள் சில விதிவிலக்குகளுடன் வரும் பிப்ரவரி 15ந்தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  ஓட்டல்கள், உணவு விடுதிகள், திரையரங்குகள், மண்டபங்களில் 50% இருக்கைகளுடன் இரவு 10 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படும்.  உணவை வீட்டில் டெலிவரி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

எனினும், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பாக்கள், அழகு நிலையங்கள், சரணாலயங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மராட்டியத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.  இதன்படி, அழகு நிலையங்கள், முடி வெட்டும் சலூன் கடைகளுடன் இணைந்து செயல்படலாம்.  50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

உடற்பயிற்சி கூடங்களும் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.  எனினும் இந்த சேவையை முழு அளவில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களே பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story