காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்


காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 12 Jan 2022 3:23 AM GMT (Updated: 12 Jan 2022 3:23 AM GMT)

காங்கிரஸ் பாதயாத்திரைக்கு தடை விதிக்க உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி பாதயாத்திரையை கடந்த 9-ந் தேதி தொடங்கி நடத்தி வருகிறது. இது வருகிற 19-ந் தேதி பெங்களூரு பசவனகுடியில் நிறைவடைகிறது. 

கொரோனா பரவலுக்கு மத்தியில் காங்கிரஸ் பாதயாத்திரை நடத்துவது சரியல்ல என்று அரசு கூறியுள்ளது. இந்த பாதயாத்திரையை கைவிட வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்துவிட்டது. அரசு விதித்த தடை ஆணையை மீறி இந்த பாதயாத்திரை நடந்து வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி விதிமுறைகளை மீறி பாதயாத்திரை நடத்தி வருகிறது. இதனால் வைரஸ் தொற்று பரவல் தீவிரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த பாதயாத்திரைக்கு தடை விதிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story