கேரளா: கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 94% பேருக்கு ஒமைக்ரான் திரிபு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Jan 2022 5:30 PM GMT (Updated: 27 Jan 2022 5:30 PM GMT)

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமைக்ரான் திரிபு பாதிப்பு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்புக்குள்ளானவர்களில் 6% பேருக்கு டெல்டா வகை திரிபு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ், “கேரளாவில் மூன்றாம் அலை ஒமைக்ரான் அலை என்பது தற்போது தெளிவாகிவிட்டது. கொரோனா நோயாளிகளின் 94 சதவிகித மாதிரிகளில் ஒமைக்ரான் வகை கொரோனா இருக்கிறது. டெல்டா வகை 6 சதவிகித பேருக்கு மாதிரிகளில் உள்ளது.

மற்ற இடங்களிலிருந்து கேரளாவில் வந்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 20 சதவிகிதம் பேர் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக கேரளாவில் இன்று புதிதாக 51,739 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58.26 லட்சமாக உயர்ந்துள்ளது.

Next Story