ஆதித்ய தாக்கரேவின் நெருங்கிய உதவியாளருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் ராகுல் கனால் என்பவருக்கு சொந்தமன இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மும்பை,
மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவின் மகனும் அம்மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான ஆதித்ய தாக்கரேவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் ராகுல் கனால் என்பவருக்கு சொந்தமன இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தன் அறக்கட்டளையின் டிரஸ்டியாகவும் உள்ள ராகுல் கனாலுக்கு சொந்தமான இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல், சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான ரம்தாஸ் கதம் என்பவரின் சகோதரரான சதானந்த் கதம் என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரித்துறை சோதனையை கடுமையாக சாடியுள்ள ஆதித்ய தாக்கரே, மத்திய விசாரணை முகமைகள் தவறாக பயன்படுத்தப் படுவதாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளால் சிவசேனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 25 ஆம் தேதி சிவசேனாவை சேர்ந்த யெஷ்வந்த் ஜாதவ் உள்ளிட்டோருக்கு சொந்ததமான இடங்களில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமானத்துறை வரித்துறை சோதனை நடத்தியிருந்தது.
Related Tags :
Next Story